ஞாயிறு, 30 அக்டோபர், 2016

திருவில்லிபுத்தூரில் ...

நெஞ்சம் நிறைந்த நன்றி ....

30.10.2016 அன்று,  தமிழக அரசு சின்னம் கொண்ட கோபுரம் மற்றும் பால்கோவாவிற்கு புகழ் பெற்ற நகரமான திருவில்லிபுத்தூர் நகரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் ஏற்பாடு செய்திருந்த மாதம் ஒரு எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன். எனது "காட்டு நெறிஞ்சி " கவிதை நூல் குறித்து தோழர் வழக்கறிஞர் கவிஞர் அன்னக்கொடி மிக நுட்பமான விமர்சனத்தை வழங்கினார். தோழர் ரமேஷ் வர இயலாததால் அவர் எழுதிக்கொடுத்த விமர்சனத்தை மன்ற செயலாளர்  தோழர் முத்துகுமார் வாசித்தார். என்னுடன் வந்திருந்த தம்பி கவிஞர்  மா.கை. நாகநாதன் அவரது  கவிதை வாசித்தார். இலக்கிய நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு மட்டுமல்ல இலக்கியத்திலும் சிறந்து விளங்குகிறது என்று கூறி எனது ஏற்புரையை நிறைவு செய்தேன். இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த இலக்கிய மன்ற தலைவர் தோழர் கோதைமணியன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.  தோழர் கவிஞர் இனியநந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக