ஞாயிறு, 2 அக்டோபர், 2016

மனோரா... - சோலச்சி

இன்று தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் ஊராட்சி "மனோரா " வில்.....

வங்கக்கடலின் எழில்மிகு தோற்றம். வரலாற்று சிறப்பு மிக்க மனோரா வானது எட்டடுக்கு கோட்டையாகும். கோட்டையை சுற்றி மிகப்பெரிய அகழி. தற்போது கோட்டை பழுதடைந்த நிலையில் இரண்டு அடுக்கு வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்தபோது கடற்கரையில் குதிரை சவாரி மாலை நேரத்தில் வறுத்த மீன் புகழ் பெற்றது.  தற்போது  கடற்கரை சாக்கடையாக உள்ளது.  கடற்கரைக்கு யாரும் செல்ல முடியாத அவலநிலை. வெறிச்சோடி கிடக்கிறது.
கழிப்பிட வசதிகள் பராமரிப்பு இன்றி தேடாநாதியாக இருக்கிறது.  சுற்றுலா பயணிகள் வந்தாலும் உடனே கிளம்பிவிடும் நிலை. பரந்து விரிந்த ஆலமரம் பறவைகளுக்கு மட்டுமல்ல சின்னக் குழந்தைகளுக்கும் விளையாட்டு மைதானமாக விளங்குகிறது. சிறுவர் பூங்கா பக்கம் யாரும் செல்வதில்லை. காரணம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதுதான்.  கடற்கரையில் ஆட்டம் போடும் ஆவலோடு வந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

   அரசு கவனம் செலுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.....

   "மனோரா " பார்க்க வேண்டிய இடம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக