ஞாயிறு, 6 மார்ச், 2016

ஏமாந்ததும் இழந்ததும்.... - சோலச்சி

2001 இல் " ஒளி தனிப்பயிற்சி நிலையம் " (இலவசமாக முதல்வகுப்பு  முதல் பத்தாம்வகுப்பு வரை ) ஆரம்பித்து மாணவர்களுக்கு மாலை நேரத்தில் வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்த காலம் . அப்போது அறந்தாங்கியை சேர்ந்த நண்பர் ஒருவர் நாளை காலை புதுக்கோட்டைக்கு வாருங்கள்,  மாணவர்களுக்கு பரிசு பொருள்கள் வாங்கிதருகிறேன் என்று சொன்னார். நானோ பை எதும் எடுத்து வரட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர் பெரிய பெட்டி இருந்தால் எடுத்து வாருங்கள் என்றார். நானும் நம் மாணவர்களுக்கு நிறைய பரிசு பொருள் கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் பெரிய பெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு மறுநாள் காலையில்  எங்கள் கிராமமாகிய அகரப்பட்டியில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டைக்கு சென்றேன். அரைமணி நேரம் கழித்து வந்தவர் கையில் ஒரு மிகச்சிறிய பாலிதீன் பை ஒன்றை கொடுத்தார். (உள்ளே  30 பென்சில் 30 ரப்பர்)  இதை நான் கொடுத்ததா சொல்லி உங்கள் மாணவர்களிடம் கொடுங்கள். நான் தஞ்சாவூருக்கு ஒருவேளையாக போகிறேன் என்றவர், இது என்ன பெட்டி என்று கேட்டவரிடம் நீங்கதானே எடுத்து வர சொன்னீங்க என்றேன்...பரிதாபமாக.

           அவரும் மற்ற நண்பர்களும்..  "இந்த காலத்துலயும் இப்புடி கேனத்தனமா இருக்கீக "னு சொல்லி சிரித்துக்கொண்டே சென்றனர். நான் இன்றுவரை சிரித்துக்கொண்டு இருக்கிறேன்.

           ஆண்டுகள் பல கடந்தும் அவரைப்பற்றிய தகவல் இன்றுவரை எங்கு இருக்கிறார் என்று கூட தெரியவில்லை .....
       
(சொன்னபடி வாழனும்னு நெனச்சுதாங்க உண்மையா வாழ்ந்துகிட்டு இருக்கேன். இதில் ஏமாந்ததும் இழந்ததும் ஏராளம்.....)
       
            -  சோலச்சி
           புதுக்கோட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக